கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் டாப்டிவிசனில் பணிபுரிந்து வருபவர் பாபு இவரின் மனைவி முத்துலட்சுமி வயது 47 இவர் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும் குளிப்பதற்க்காக குளியல் அறையில் மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட வைத்தவர் சுவிட்சை ஆஃப் செய்யாமல் தண்ணீரை சூடாகி விட்டதா என்று தொட்டு பார்த்ததவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி எறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்குவந்த கணவர் மனைவியை காப்பாற்ற முயற்சித்த போது அவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசிய நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அருகே உள்ள முடீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர் .அங்கு வந்த காவல்துறையினர் பாபுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்த முத்துலட்சுமியை உடற்கூராய்விற்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply