கோவை: ஈரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் கிருத்திகா( வயது 24 )இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி .ஏ. படித்து வருகிறார்.இவர் 16 -2 -20 20 அன்று சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அங்கு ராஜ்குமார் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர்.சென்னையில் வைத்து கிருத்திகாவை அவர் பல தடவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.பிறகு ராஜ்குமார் உடைய பழக்கவழக்கங்கள் பிடிக்காமல் கிருத்திகா அவரிடம் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர்கள் நெருங்கி பழகும் போது ராஜ்குமார் அவரிடம் போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்.இந்த போட்டோக்களை திருப்பித் தருமாறு கிருத்திகா ராஜ்குமாரிடம் கேட்டார். அவர் கோவை கொடிசியா வளாகம் அருகே வந்தால் தருகிறேன் என்று கூறினார். அங்கு சென்ற கிருத்திகாவை ராஜ்குமார் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது .இதில் கிருத்திகா காயம் அடைந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் ராஜ்குமார் மீது கற்பழிப்பு, தாக்குதல் உட்பட 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
Leave a Reply