அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபகாலமாக காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், ...
வாகனங்களுக்காகப் பணத்தை வாரி இரைப்பவர்களை உலக முழுவதிலும் நம்மால் காண முடிகின்றது. இந்தியாவிலும் இந்த மாதிரியான நபர்கள் அதிகம் இருக்கின்றனர். இதற்கு மிகச் சிறந்த சான்றாக அம்பானி குடும்பத்தினர் இருக்கின்றனர். நம்மில் பலர் பத்தாண்டுக்கு ஒரு முறை அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே வாகனங்களை மாற்றுபவர்களாக இருக்கின்றோம். ஆனால், இந்தச் செல்வம் கொழித்த குடும்பத்தினர் ...
சிங்கப்பூரின் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் ஜூலை 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதுதவிர, வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்குச் சொந்தமான டிஎஸ்-சாா் எனும் புவி ...
ஈரோடு மாவட்டம்: பண்ணாரி வனச்சோதனைச்சாவடியில் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய வனஊழியர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 48வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமணம் மண்டபத்தில் புதுவடவள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய ...
வடமாநில பெண் 2 குழந்தைகளுடன் திடீர் மாயம்..! மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பஷீர் அகமது வயது 31 இவர் கோவை செல்வபுரம் எல்ஐசி காலனியில் குடும்பத்துடன்தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சகானா பாத்( வயது 25 இவர்களுக்கு திருமணம் ஆகி 8ஆண்டுகள் ஆகிறது. சகானாபாத் உசேன் (வயது 4)என்ற மகனும் நூர்காதும் ...
கோவையில் கடன் தொல்லையால் பரிதாபம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை – உருக்க கடிதம் சிக்கியது..! கோவை அருகே உள்ள வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 34) இன்ஜினியர். இவரது மனைவி லக்ஷா என்ற சுருதி ( வயது 29) பட்டதாரியான இவர் பிரஞ்சு மொழியில் டாக்டர் பட்டம் ...
மதுரை: மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய தெற்கு மாசி வீதியில் பிரதான கடைகள் உண்டு. அந்த பகுதியில் ஜவுளி கடைகளும், பிளாஸ்டிக் மற்றும் நகை கடைகள் உள்ளது. மதுரையின் மத்திய பகுதியாக தெற்கு மாசி வீதி ...
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் மீண்டும் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தகவலை அடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் வன்முறை கலவரம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசும், மாநில அரசும் கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர ...
மாஸ்கோ: போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புடினை கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த மாதம் நடக்க உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையே போர் துவங்கியது முதல் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே, உக்ரைனிலிருந்து ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே நேற்று அதிகாலை சத்தியமங்கலம் வனச்சரகம் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ...










