புடினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மாஸ்கோ: போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புடினை கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அவர் அடுத்த மாதம் நடக்க உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையே போர் துவங்கியது முதல் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையே, உக்ரைனிலிருந்து சட்ட விரோதமாகக் குழந்தைகளை நாடு கடத்திய குற்றத்துக்காக, ரஷ்ய அதிபர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வரான்ட் பிறப்பித்துள்ளது.அடுத்த மாதம் நடக்க உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் வருகை தர உள்ளார் என தகவல் வெளியானது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு புடின் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணி கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்நிலையில், போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புடினை கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புடின் எப்போதாவது தென் ஆப்பிரிக்காவில் கால் வைத்தால், அவரை கைது செய்யுமாறும் தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..