மதுரை தனியார் பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து..!

துரை: மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் இருக்கக்கூடிய தெற்கு மாசி வீதியில் பிரதான கடைகள் உண்டு.

அந்த பகுதியில் ஜவுளி கடைகளும், பிளாஸ்டிக் மற்றும் நகை கடைகள் உள்ளது. மதுரையின் மத்திய பகுதியாக தெற்கு மாசி வீதி பகுதி இருக்கிறது.

இந்நிலையில் திடீரென்று அங்கிருக்கக்கூடிய DGM பிளாஸ்டிக் என்று சொல்லக்கூடிய தனியார் பிளாஸ்டிக் கடையின் முதல் மாடியிலிருந்து கரும் புகை வெளியேற தொடங்கியது. பிரதான சாலை என்பதால் அங்கிருக்க கூடிய பொதுமக்கள் உடனடியாக தகவலை அருகில் இருக்கக்கூடிய தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திடீர்நகர், தல்லாவலம் மற்றும் அனுப்பானடி பகுதியை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுக்குமாடியில் இருக்கின்ற பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. மின் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகாலை கடையை திறப்பதற்கு முன்பதாக இந்த விபத்து நடைபெற்றிருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியது. தொடர்ந்து தீயானது அருகில் இருக்கக்கூடிய கட்டிடங்களுக்கு பரவாமல் இருப்பதற்கும், கரும்புகையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. மீண்டும் அதே கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்..