கோவையில் கடன் தொல்லையால் பரிதாபம் – loஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை – உருக்க கடிதம் சிக்கியது..!

கோவையில் கடன் தொல்லையால் பரிதாபம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை – உருக்க கடிதம் சிக்கியது..!   கோவை அருகே உள்ள வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 34) இன்ஜினியர். இவரது மனைவி லக்ஷா என்ற சுருதி ( வயது 29) பட்டதாரியான இவர் பிரஞ்சு மொழியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவர்கள் ஒரே மகள் யக்சிதா (வயது 10) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வீட்டில் ராஜேஷின் தாய் பிரேமா ( வயது 74) என்பவரும் வசித்து வந்தார் .இவர்கள் இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த வாடகை வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் சிவா என்பவர் நேற்று மாலை 7 மணி அளவில் வீட்டின் வாசலின் மின்விளக்கு போடுவதற்காக சென்றார். அப்போது ராஜேஷ் வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதற்கிடையில் கடந்த 2நாட்களாக அந்த வீட்டில் யாரும் வெளியே வரவில்லை .இதனால் சந்தேகம் அடைந்த சிவா உடனே லட்சாவின் தந்தையான நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பாலன் என்பவரை செல்போனில் தொடர்பு உண்டு தகவல் தெரிவித்தார் .உடனே பாலன் விரைந்து வந்தார் அப்போது வீடு உட்புறமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து வடவள்ளி போலீசுக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்..அங்கு ராஜேஷ் தூககில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். ராஜேஷின் தாயார் பிரேமா மனைவி லக்‌ஷயா,மகள் யக்சிதா ஆகியோர் விஷம் குடித்து படுக்கையறையில் பிணமாக கிடந்தனர் இதை தொடர்ந்து பிணமாக கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த என்ஜினியர் ராஜேஷ் உட்பட 4 பேரின் உடலையும் மீட்டுகோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர்கள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா?அல்லது வேறு ஏது காரணமா?என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள் .தற்கொலை செய்து கொள்வதற்கு முன் லக்க்ஷயாவும் ,கணவரும் கூட்டாக கடிதம் எழுதி வைத்துள்ளார் .அந்த கடிதத்தை போலீசர்ர்கைப்பற்றினார்கள்.அதில் அவர்கள்கூறியிருப்பதாவது: நாங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். தொழில் ரீதியாக கடன் வாங்கக்கூடிய நிர்பந்தம் ஏற்பட்டது.அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி விட்டோம்.எவ்வளவோ முயற்சி செய்தும்,அந்தக் கடனை எங்களால் திருப்பி செலுத்த முடியவில்லை.இந்த நிலையில் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்.எங்களை எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் ராஜேஷ் அவரது மனைவியை லக்சயா மகள் யக்சிதா, தாய் பிரேமா ஆகியோர் தற்கொலை செய்வதற்கு முன் கடந்த 20ஆம் தேதி செல்போன் ஆப் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர் அதன் பிறகு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர் மேலும் அவர்கள் வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஏ.சி யை. ஆப் செய்யாமல் தொடர்ந்து இயங்கும்படி செய்துள்ளனர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட லக்ஷயாவின் தந்தை பாலன் கடந்த 20ஆம் தேதி காலை 8-30 மணிக்கு தனது மகளின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அன்றைய தினம் இரவு பாலன் செல்போனில் அழைப்பு விடுத்தார். அப்போத செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து முயற்சி செய்தும் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது அதன் பிறகு நேற்று தான் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டது.தெரியவந்தது.