கோவை தடாகம் சாலை நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டபட இருந்த 25 மரங்களை கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் (ஒரு சமூக செயற்பாட்டு களம்) அமைப்பின் சார்பில் வேறுடன் அகற்றப்பட்டு வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியில் மறு நடவு செய்யப்பட்டது. இதில் 21 மரங்கள் துளிர்த்துள்ளது. இந்தநிலையில் டிவிஎஸ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நன்கு வளர்ந்திருந்த அரச ...

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் சுதாகர், இவர் சென்னை பெருநகர் போக்குவரத்து இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை இணை கமிஷனராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் . அவர் நேற்று மாலை கோவை ரேஸ் கோர்சில் உள்ள ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருகிறது. முன்தினம்  நடைபெற்ற ஏலத்திற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், உக்கரம், பெரியூர், செண்பகபுதூர், சிக்கரசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1532 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ...

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் நடைபெற்ற அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு தென்கிழக்கில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து கடந்த 25ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 9 மீனவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் . அவர்களை விடுவிக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர்,பேச்சிமுத்து பிள்ளை வீதியை சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகன் கதிர்வேல் (வயது 26) இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் விட்டத்தில் துண்டை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பு,சக்தி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 48) இவர் நேற்று தனது மகன் ஹேமலதா ( வயது 18 ) என்பருடன் பைக்கில் மேட்டுப்பாளையம் -சக்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஆலங்கொம்பு பஞ்சாயத்து அலுவலகம் முன் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அன்னையின் கிழக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (44). இவருக்கும் கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் கீர்த்தனா (23) இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ஆடி 18 பண்டிகைக்காக கார்த்தி ,கீர்த்தனா இருவரும் கோவையில் உள்ள கீர்த்தனாவின் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி விவசாய விளைநிலங்களுக்கு இடையே எவ்வித அனுமதியும் இன்றி ரப்பர் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் கலப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர். அனுமதியின்றி ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3 மணி அளவில், தரைத்தளத்திலும் முதல் தரத்திலும் உள்ள அந்த கடையில் இருந்து திடீரென்று புகை வந்தது.பிறகு தரைத்தளத்திலும் முதல் தளத்திலும் தீ மள மளவென பரவியது .இதை பார்த்தவர்கள் தீயணைப்பு ...