ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் ...
திருப்பதி மலைப்பகுதியில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மூன்றாவது சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் கடந்த 11ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா திடீரென மாயமானார். அவரை சிறுத்தை இழுத்துசென்றது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற ...
தமிழக அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாகாவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் வரை ...
சிம்லா: இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இதுவரை 81 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இமாச்சலில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை ஜூலை, 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தது. இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து, நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் ...
கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் தேவராஜ் நேற்று காலை மலுமிச்சம்பட்டி பகுதியில் வாடிக்கையாளர் காத்திருப்புக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் இரு கால் டாக்ஸிகள் மீது அதிவேகமாக மோதினார் இந்த சம்பவத்தில் கால் டாக்ஸி ...
கோவை தெலுங்குபாளையம் புதூர், பாரதி ரோட்டை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55) சலவை தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து இவரது அண்ணன் ரங்கசாமி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் . ...
கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் ராஜாராம் ( வயது 29) எம்.பி.ஏ .பட்டதாரி. இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசிகா ( வயது 28) முதுநிலை பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது கடந்த ...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 ...
மதுரை பாத்திமா கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தென்னவர் சிலம்பம் பள்ளி சார்பாக மாபெரும் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் வைகை சிலம்பம் பள்ளி தலைவர் சுகன்யா, செயலாளர் பாலு, அமைப்பாளர் விமல் குமார் ஆகியோர் தலைமையில் 70 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ராஜேந்திரன் ...













