அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ரப்பர் ஆலை தற்காலிக மூடல்.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி விவசாய விளைநிலங்களுக்கு இடையே எவ்வித அனுமதியும் இன்றி ரப்பர் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் கலப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர். அனுமதியின்றி செயல்படும் இந்த ரப்பர் ஆலையால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் கெட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய  விவசாயிகள் மற்றும் விண்ணப்பள்ளி விளாமுண்டி விவசாயிகள் நலச் சங்கத்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  முன்தினம் தொழிற்சாலையை மூடக்கோரி ஆலை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நேற்று ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இது சம்பந்தமாக அரசு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அனுமதி இன்றி அமைக்கப்பட்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்..