கோவையில் மது போதையால் வெவ்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கோவை அருகே உள்ள குறிச்சிபிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் கணேசன் ( வயது 53) இவர் மின்வாரிய அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்றிரவு தென்னம்பாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தினார். அவர்கள் நிற்காமல் சென்றதால் ஜீப்பில் துரத்திச் சென்றார். அப்போது ஜீப் ரோட்டில் உள்ள டிவைடரில் மோதியது. இதில் அவரது இடது கை,தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், எம். ஜி. ஆர். காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து( வயது 60)டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் பாக்கியம் என்ற பெண்ணை திருமணம் செய்யாமல் கணவன்- மனைவியாக வாழ்க்கை நடத்தி வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் முன் மின் ஒயர் அறுந்து கார் மீது விழுந்தது. இதனால் ...

கோவை : தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகர பகுதியில் பெரிய கடைவீதி, ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், வெரைட்டி ஹால் ரோடு, சரவணம்பட்டி, செல்வபுரம், சாய்பாபா காலனி உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், ரத்தினபுரி, கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, துடியலூர், என மொத்தம் 20 போலீஸ் ...

தேர்தல் அறிக்கை எண். 178 படி காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊர் புற நூலகர்கள் தஞ்சையில் மாவட்டத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கு தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்ட உள்ளது படி காலம் முறை ஊதியம் ...

தமிழ்நாட்டில் பல காலமாகப் பத்திரப்பதிவுத் துறைக்கான கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருந்து வந்த நிலையில், சமீபத்தில்தான் கட்டணங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டன. பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை உள்ளிட்ட பத்திரங்களின் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதேபோல, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக் கட்டணத்தையும் அரசு உயர்த்தியிருந்தது. இந்த கட்டணங்களை குறைக்க கோரிக்கை எழுந்து வரும் ...

கவுகாத்தி: இந்தியா என்பதற்கு பதிலாக, இனி, ‘பாரத்’ என்று தான் பயன்படுத்த வேண்டும் என, பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் பெயர் இந்தியாவா, பாரதமா என்ற சர்ச்சை, சுதந்திரம் கிடைத்த, 1947 முதல் இருந்து வருகிறது. அதனால் தான் நம் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, ...

கோவை மாவட்டம் காரமடை சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் கிராமம், குமரன் குன்று பகுதியைச் சேர்ந்தவர் காந்தி ( வயது 49) இவர் நேற்று மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள எருமை பள்ளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் சென்ற பைக் மீது மோதியது. ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு,குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49) இவர் கடந்த 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் புஷ்பவதி (வயது ...

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின.குறிப்பாக அவரது, ‘ஏய்… இந்தம்மா’ வசனம் இணைய உலகத்தில் மிகப்பிரபலம். மறைந்த நடிகர் மாரிமுத்து தனது ஆரம்ப காலங்களில் ...