தஞ்சையில் ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதம்..!

தேர்தல் அறிக்கை எண். 178 படி காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊர் புற நூலகர்கள் தஞ்சையில் மாவட்டத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கு தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்ட உள்ளது படி காலம் முறை ஊதியம் வழங்க ஆவண செய்ய வேண்டிய தஞ்சை மாவட்ட, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காந்திய வழியில் மிக அமைதியான முறையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் காலம் முறை ஊதியம் பதவி உயர்வு மற்றும் தேர்வு நிலை ஊதிய உயர்வு உள்ளிட்ட பணபலன்கள் வழங்கப்படவில்லை .எனவே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு காந்திய வழியில் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊர்ப்புற புற நூலகர்கள் சங்கத்தினர் கூறினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பெண்கள்உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊர்ப்புற நூலகர்கள்சங்க தஞ்சாவூர் சங்ககௌரவ தலைவர் முருகானந்தம், தஞ்சாவூர் மாவட்டசெயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் டேவிட் ஆகியோர் தலைமை வகித்தனர் . கலையரசி, பிரபாவதி, சுதா மற்றும் பொறுப்பாளர்கள் சத்தியா ,லிடியா ,ஜெயபரணி, ரேவதி ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் . அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி ,அரசு ஊழியர்சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்து பேசினார்..