கோவை மாநகர காவல்துறையில் போலீஸ் உதவி கமிஷனர்கள் ஏரியாக்கள் மாற்றி அமைப்பு..!

கோவை : தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகர பகுதியில் பெரிய கடைவீதி, ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், வெரைட்டி ஹால் ரோடு, சரவணம்பட்டி, செல்வபுரம், சாய்பாபா காலனி உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், ரத்தினபுரி, கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, துடியலூர், என மொத்தம் 20 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இது தவிர கோவை மாநகர மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு, ஆகிய மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இவற்றை எளிதாக கண்காணிக்கும் வகையில் சிங்காநல்லூர், காட்டூர், சாய்பாபா காலனி, ஆர் .எஸ். புரம்,போத்தனூர் குனியமுத்தூர் உக்கடம் ஆகிய உதவி கமிஷனர் அலுவலகங்களும் உள்ளன. தற்போது இந்த உதவி கமிஷனர் அலுவலக பகுதிக்கு உட்பட்ட இடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சிங்காநல்லூர் பகுதியில் சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி,கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களும், காட்டூர் பகுதியில் காட்டூர், ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி ஆகிய காவல் நிலையங்களும், சாய்பாபா காலனி பகுதியில் சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் , துடியலூர்,கோவை மத்திய மகளிர் போலீஸ்நிலையம்,ஆகிய போலீஸ் நிலைங்களும் ஆர். எஸ். புரம் பகுதியில் ஆர். எஸ். புரம் ,வடவள்ளி, மேற்கு மகளிர் போலீஸ் நிலையமும் இருக்கும். மேலும் போத்தனூர் பகுதியில் ராமநாதபுரம், போத்தனூர், சுந்தராபுரம், தெற்கு மகளிர் போலீஸ் நிலையமும், குனியமுத்தூர் பகுதியில் செல்வபுரம், குனியமுத்தூர், கரும்புக்கடையும், உக்கடம் பகுதியில் பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால்ரோடு, உக்கடம் ஆகியவையும் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..