திருச்சி ரயில்வே இக்கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள், வாரந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதன் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் திருச்சி கோட்டத்துக்கு முந்தைய ஆண்டின் வருவாயைவிட 15.33 சதவீதம் அதிகரித்து ரூ.372.84 கோடி கிடைத்தது. இதை மேலும் அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை ...

டெல்லியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அலிப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சந்தையில் ஒரு பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு முதல் கடுமையாக போராடினர். பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் உள்ளே ரசாயன ...

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை முதல் கட்சியாக திமுக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக ...

தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால்  மதியம் 2:30 மணி விமானத்தில் கோவை வந்தார்.போலீஸ் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.தமிழ்நாடு காவல்துறை சார்பில் 63வது தமிழகத்தில் உள்ள காவல்துறை மண்டலங்களுக்கு இடையான தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலை பரிசளிப்பு விழா ...

திருச்சி அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள் நிலை 10 இல் இருந்து 11 இல் இருந்து  12 இல் இருந்து 13 ஏ (இணைப்பேராசிரியா்) ஆகியோருக்கான பணி உயா்வு தகுதி ஆணையை தமிழக அரசின் உயா் கல்வித்துறை வழங்கி 6 மாதமாகியும், நிதிநிலையைக் காரணம் காட்டி அதற்குரிய ஊதிய உயா்வை இதுவரை ...

கோவையில் இன்று குண்டுவெடிப்பு நடந்த தினம் ஆகும். இதையொட்டி கோவையில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம், கோவில்கள் மசூதிகள் ,கிறிஸ்தவ ஆலயங்கள்  ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வஜ்ரா வாகனம் , கலவர தடுப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் ...

கோவை புலியகுளம், சவுரிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி .இவரது மகன் கபிலன் ( வயது 31 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் கபிலன் அவரது பெற்றோர்கள் இறந்ததை நினைத்து மன வருத்தத்தில் இருந்தார். நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...

கோவை சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள ரங்கநாதபுரம் அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) இவரது மகன் பிரபாகரன் ( வயது 39)சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை – அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பிரபாகரன் ஓட்டினார். தந்தை முத்துசாமி பின்னால் ...

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டும், அரை நிர்வாணத்துடனும், சாலையில் படுத்து உருண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற ராமச்சந்திரன், பரமசிவம், நவீன்குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்தப்பகுதியில் உள்ள செயின் பால்ஸ் காம்ப்ளக்ஸ் மாடியில் ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்டபொன்னையராஜபுரம் பகுதியில் 20 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து அதை கண்காணிக்கும் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்த மையத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- குற்றங்களை கண்டறிவதில் காவல் துறைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது ...