கோவையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இடங்களில் குற்றங்கள் குறைகிறது – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்.!!

கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்டபொன்னையராஜபுரம் பகுதியில் 20 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து அதை கண்காணிக்கும் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்த மையத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- குற்றங்களை கண்டறிவதில் காவல் துறைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது கண்காணிப்பு கேமராக்கள் தான். இதனால் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளில் குற்றங்களில் ஈடுபட தயங்குகிறார்கள். இந்த அச்சம் காரணமாக அந்த பகுதியில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. வீடுகளில் ஒரு கேமராவை உங்களது பாதுகாப்பு பயன்படுத்தினாலும், மற்றொரு கேமராவை ரோட்டை பார்த்து வையுங்கள்.அது உங்கள் பகுதியின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும். இங்கு 20 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு அறையை திறந்து இருப்பது குற்றங்களை முழுமையாக தடுக்க உதவும். அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் கேமிராக்களை பொருத்துவது கோவையை குற்றமற்ற நகரமாக மாற்ற உதவும். அதோடு குற்றவாளிகளை கண்டறிய போலீசருக்கு மிகுந்த நண்பராக கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளன. இவ்வாறு பேசினார். இந்த விழாவில் போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், மேற்கு பகுதி உதவி கமிஷனர் வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.