தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில் மற்றும் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் அடுத்தடுத்து மோதி ...

கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் – 12842) இன்று மாலை 3. 20 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் ...

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்னையில் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேகதாது பிரச்னையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமைச்சர் துரைமுருகன் கடந்த மே மாதம் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான ஓட்டு ...

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.கஸ்டாலின் நூற்றாண்டு விழாவிற்கான இலச்சினையை வெளியிட்டார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் ...

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் பேரில்இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது ...

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தை கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். மற்றொரு படகில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ 270 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். ...

தூத்துக்குடி: பிராமணர்களுக்கு விரோதியாக செயல்படுவதாக எஸ்வி சேகர் குற்றம்சாட்டி உள்ளதாக அண்ணாமலையிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, எஸ்வி சேகரை கடுமையாக சாடினார். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றால் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் போட்டு தருகிறேன். அவர் போய் புகாரளிக்கட்டும் என சவால் அளித்தார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் ...

சென்னை: மதிமுகவில் காலம் காலமாக ஒரே பதவியில் அமர்ந்திருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புது முகங்களுக்கு முக்கியப் பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் வைகோ. அந்த வகையில் மதிமுகவின் புதிய அவைத்தலைவராக ஆடிட்டர் அர்ஜூன் ராஜும், பொருளாளராக செந்திலதிபனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மதிமுக தலைமைக்கழகச் செயலாளராக இருந்த துரை வைகோ, ...

சென்னை :வரும் லோக்சபா தேர்தல் வெற்றிக்காக, ஆறு மாதங்களில், 100 லோக்சபா தொகுதிகளில் ‘ஊர்வல பிரசாரம்’ நடத்த, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில், மூன்றாவது முறையும் வென்று, ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க, பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தல் ...

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். டெல்லி மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் யூனியன் பிரதேசமாகவே இருக்கிறது. இதனால் அங்கே ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருந்தாலும், சில முக்கிய அதிகாரம் மத்திய அரசுக்கே இருந்து வருகிறது. ...