பிராமணர்களுக்கு விரோதியா..? டெல்லிக்கு போங்க.. முடிஞ்சா என்னை பதவியில் இருந்து தூக்குங்க.. டிக்கெட் போடவா? எஸ்வி சேகரை வெளுத்து வாங்கிய அண்ணாமலை.!

தூத்துக்குடி: பிராமணர்களுக்கு விரோதியாக செயல்படுவதாக எஸ்வி சேகர் குற்றம்சாட்டி உள்ளதாக அண்ணாமலையிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, எஸ்வி சேகரை கடுமையாக சாடினார். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றால் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் போட்டு தருகிறேன். அவர் போய் புகாரளிக்கட்டும் என சவால் அளித்தார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடியில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த வேளையில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், எஸ்வி சேகர் குறித்த கேள்விக்கு அண்ணாமலை சொன்ன பதில் எஸ்வி சேகர் பற்றிய கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர், ”அண்ணாமலை பிராமணர்களுக்கு விரோதி. அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் என கூறியுள்ளாரே?” என கேள்வி கேட்டார். இதற்கு அண்ணாமலை பதிலளித்தார். இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:

டெல்லிக்கு போக சொல்லுங்கள். டெல்லி செல்ல இண்டிகோவில் 6,500 தான் டிக்கெட் கட்டணமாக உள்ளது. யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையை அவர்களை டெல்லிக்கு போகச்சொல்லுங்கள். நான் யாருக்கும் விரோதி இல்லை. ஆனால் என்னை பழைய பஞ்சாங்கத்தை வைத்து கட்டுப்படுத்தலாம் என நினைத்தால் நான் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டேன். அதில் நான் ரொம்ப தெளிவாக இருக்கிறேன்.

அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய மனிதன் நான். நான் அப்படி, இப்படி இருந்தேன். என் அப்பா அப்படி, தாத்தா இப்படி இருந்தார். நான் 40 வருடமாக இப்படி இருந்தேன் என்பதையெல்லாம் வீட்டில் வைத்து விட வேண்டும். இது எஸ்வி சேகருக்கு மட்டுமல்ல அவருடன் இருக்கும் அனைவருக்கும் தான் இதை சொல்கிறேன்.

பழம்பெருமை கதைகளை எல்லாம் கூறி கட்டுப்படுத்தும் வேலையை என்னிடம் வைத்து கொள்ள வேண்டாம். வேண்டுமென்றால் டெல்லி செல்ல டிக்கெட் வாங்க பணம் இல்லாவிட்டால் நாங்களே ரூ.6,500க்கும் டிக்கெட் போட்டு தரேன். டெல்லிக்கு போங்க.. என்னை பதவியில் இருந்து தூக்க பேசுங்கள். முயற்சி எடுங்கள்” என சாடினார்.