கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.கஸ்டாலின் நூற்றாண்டு விழாவிற்கான இலச்சினையை வெளியிட்டார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுக செய்து வருகிறது. அதேபோல், தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலை வைப்பது திமுக கொடிக் கம்பங்களை புதுப்பிப்பது கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோக சென்னை புளியந்தோப்பில் திமுக கூட்டணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் செய்யப்பட உள்ளன. பெண்கள், மாணவ, மாணவிகள் என பயன் அடைந்த மக்களை இணைத்து விழாவை கொண்டாட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கருணாநிதியின் நூற்றாண்டு விழா முன்னேற்பாடாக கலைவாணர் அரங்கில் இன்று கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றர். சிறப்பு விருந்தினராக மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பங்கேற்றார். இந்த விழாவில் நூற்றாண்டு விழாவிற்கான லோகோவை முதல்வர் வெளியிட்டார். முடிவுற்ற என பொருள்படும் படியான இலச்சினை வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.