வெப்ப சலனம் காரணமாக, 24.05.2023 முதல் 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ...

மிக பிரமாண்டமாகவும் அதி நவீனமாகவும் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் ...

ஒன்பது நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த நாடுகளில் தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பது குறித்து பல சந்திப்புகளை நடத்தவிருக்கிறார். வெளிநாடுவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுற்றுப்பயணம் செல்வதற்காக, இன்று மே 23-ம் தேதி, சென்னை விமான நிலையத்துக்கு வந்த முதல்வரை ...

பெங்களூரு: பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த நிலையில், அல்பானீஸ் இன்று மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். குவாட் உச்சி மாநாட்டின் கூட்டங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் ...

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே ...

தமிழகத்தில் கோடை வெய்யில் உச்சத்தில் இருப்பதால் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கோடையின் உக்கிரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). இவர், அப்பகுதி மலையடிவாரப்பகுதியில் நேற்று மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மாலையில் மாடுகளை வீட்டிற்கு அழைத்து செல்லுகையில் 3 மாடுகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே தன்னுடைய நண்பர்கள் சிலரை உடன் அழைத்துக்கொண்ட மாரியப்பன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ...

சென்னை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் இல்லை என அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பேருந்து 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பல ஆண்டுகளாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 60 வயதுக்கும் அதிகமான முதியோர்கள் ...

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான். தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட ...

மறைந்து முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ஒரு நினைவிடம் கட்டவேண்டும் என்று தி.மு.க அரசு அறிவித்த நாள் முதல் தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கே.கே. ரமேஷ் என்பவர் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் ஒன்றை செய்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதிக்கு சென்னை ...