அதிர்ச்சி செய்தி… கோரமண்டல் உள்பட 3 ரயில்கள் கோர விபத்து… சென்னை பயணிகளின் முழு விவரம்..!

கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் – 12842) இன்று மாலை 3. 20 மணிக்கு புறப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாக ரயில்வேதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதால்தான் முதலில் விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறிது நேரம் கழித்து, பெங்களூருவின் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி செல்லும் மற்றொரு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 16 பேட்டியில் 800 பேருக்கு அதிகமாகனோர் முன்பதிவு செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதில் 600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மேலும், கொல்கத்தா மற்றும் பல்வேறு நகரங்களில் சென்னை வர 100க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆந்திரா வழியாக செல்வதனால், அம்மாநிலத்தை சேர்ந்த பயணிகளும் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், விபத்து ஏற்பட்ட ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்பதிவு செய்திருந்தோரின் விவரம் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை கீழ்காணும், இரண்டு புகைப்படங்களில் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்ந்து, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு நேரில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நாளை காலை ஒடிசா செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர், மேற்கொண்ட தகவல்களை அறிந்துகொள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறையின் எம்களை வெளியிட்டுள்ளனர்.

ஹவுரா ஹெல்ப்லைன் – 033 26382217 காரக்பூர் ஹெல்ப்லைன் – 8972073925, 9332392339 ஹெல்ப்லைன் – 8249591559, 7978418322 ஷாலிமார் ஹெல்ப்லைன் – 9903370746 3503370740, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் – 430 45430 953, 044 25354771 உள்ளிட்ட அவசர அழைப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.