முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69வது பிறந்த நாள். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் வீட்டில் காலையில் எழுந்ததும் புத்தாடை அணிந்து தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்தார் ஸ்டாலின். வீட்டில் இருந்த மனைவி துர்கா, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு ...

கோவை:கோவைக்கு மேற்கே தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்குள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள 6 மலைகளை பக்தர்கள் மூங்கில் தடி உதவியுடன் கடந்து சென்று 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி உள்ள கிரிமலை ஆண்டவரை தரிசிக்கின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1-ந்தேதி ...

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள புல்லாகவுண்டன் புதூரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல்சண்டை நடத்தி சூதாடியதாக மாதம்பட்டி ராஜ் (வயது 52)தொண்டாமுத்தூர் குமரேசன் (வயது 32)சுண்டப்பாளையம் குணசேகரன் ( வயது 50) மத்துவராயபுரம் வீராசாமி ...

திருவண்ணாமலை அடுத்த கருமாரப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 2022-ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மங்கலம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, கருவூட்டல், சினைப் ...

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளை சேர்ந்த 811 கவுன்சிலர்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கின்றனர். நகர்ப்புற தேர்தல் தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 811 ...

கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள மத்வராயபுரம் சி.எஸ்.ஐ.கிறிஸ்து நாதர் ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை கூட்டம் நேற்று நடந்தது. இதை தென்னிந்திய திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர் நடத்தி வைத்தார். இதில் ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், செயலர் எமர்சன், பொருளாளர் ஆனந்த் ஆசீர், திருமண்டல குழு உறுப்பினர் ஜெபசிங், ஆலய போதக சேகர் குழு உறுப்பினர்கள் ஞானப்பிரகாசம், ...

கோவை:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உபைது ரஹ்மான் தலைமையில் கோயம்புத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- கோவை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்க உள்ள மேயர் கோவையில் பழுதடைந்து கிடக்கும் ரோடுகளை உடனடியாக சீர்படுத்த ...

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்களது உறவினர்கள் மற்றும் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: முப்பதுக்கும் மேற்பட்ட ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக தலைவர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது.இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் 10 ...

பள்ளத்தில் சிக்கிய யானையை இயற்பியல் கொள்கையின் மூலம் வனத்துறை அதிகாரிகள் மீட்ட வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி ட்விட்டரில் வெளியிட்டார். மேற்கு வங்க மாநிலம் மிதினாபுரத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து டிஎப்ஓ சந்தீப் பெர்வால் மற்றும் ஏடிஎப்ஓக்கள் தலைமையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ...