இயற்பியலின் ஆர்க்கிமிடிஸ் விதியை பயன்படுத்தி பள்ளத்தில் இருந்து குட்டி யானை மீட்பு.!!

பள்ளத்தில் சிக்கிய யானையை இயற்பியல் கொள்கையின் மூலம் வனத்துறை அதிகாரிகள் மீட்ட வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி ட்விட்டரில் வெளியிட்டார்.

மேற்கு வங்க மாநிலம் மிதினாபுரத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து டிஎப்ஓ சந்தீப் பெர்வால் மற்றும் ஏடிஎப்ஓக்கள் தலைமையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் அதிகாலை 4 மணியளவில் மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

இதனை ஐஎப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார், அதில் “மிதினாபுரத்தில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இயற்பியலின் ஆர்க்கிமிடிஸ் கொள்கையைப் பயன்படுத்தி அந்த யானை மீட்பது” என்றார்.

ஆர்க்கிமிடிஸ் கொள்கை என்பது “ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் உடலில் செலுத்தப்படும் மேல்நோக்கி மிதக்கும் விசையானது, இடம்பெயர்ந்த திரவத்தின் நிறை மையத்தில் உடல் இடம்பெயர்ந்து மேல்நோக்கிச் செயல்படும் திரவத்தின் எடைக்குச் சமம்.”

நேற்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் 7,900-க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல்வேறு வகையான கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர். மேலும் யானையை காப்பாற்றியதற்காக மீட்புக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்