கோவை நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்தில் மனு!!!

கோவை நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்தில் மனு

கோவை மாவட்டத்தில் மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். கோவையில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 64.81%, தமிழகத்தில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம்: 69.46%.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 19, 2024 அன்று (வாக்களிப்பு நாள்) வாக்குப் பதிவு முடிவதற்கு முன்பே 1,00,000 வாக்குகள் காணவில்லை என்று புகார் கூறி இருந்தார்.

இந்நிலையில், 2019 மற்றும் 2021 தேர்தலில் வாக்களித்தவர்களில் பலரின் பெயர் இம்முறை நீக்கப்பட்டு உள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். விடுபட்டவர்கள் வாக்களிக்கும் வரை முடிவை நிறுத்தி வைக்கக் கோரி ஆஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ள சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.