கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள புல்லாகவுண்டன் புதூரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல்சண்டை நடத்தி சூதாடியதாக மாதம்பட்டி ராஜ் (வயது 52)தொண்டாமுத்தூர் குமரேசன் (வயது 32)சுண்டப்பாளையம் குணசேகரன் ( வயது 50) மத்துவராயபுரம் வீராசாமி (வயது 43 )பச்சாபாளையம் ரஞ்சித்குமார் (வயது 34) செம்மேடு சின்னசாமி (வயது 65) நரசிபுரம் சுரேஷ் (வயது 30) தேவராயபுரம் செல்வராஜ் (வயது56) முகாசி மங்கலம் ராமகிருஷ்ணன் (வயது 33)ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .இவர்களிடமிருந்து 4 சேவல்,ரூ 900 பணமும் கைப்பற்றப்பட்டது.