கோவை:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உபைது ரஹ்மான் தலைமையில் கோயம்புத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- கோவை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்க உள்ள மேயர் கோவையில் பழுதடைந்து கிடக்கும் ரோடுகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும்.மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.சமக நிர்வாகிகள்,கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து உரியவர்களுக்கு கூறி நிவர்த்தி செய்ய வேண்டும்.இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன்,ஆலடி ஆனந்த் ,முத்துப்பாண்டி பொள்ளாச்சி முரளி, நீலகிரி சுரேந்தர் ,நேருஜி, மாவட்ட அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் செல்வபுரம் சேகர் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தீஸ்வரி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மேரி, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உமா சம்பத் வனஜா மாவட்ட தொண்டரணி செயலாளர்கள் சரத் சக்தி, பால்ராஜ்,தொண்டர் அணி துணை செயலாளர் முருகன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவைபுதூர் அசரியா, இளையராஜா ,வார்டு செயலாளர்கள் நாகராஜ், சம்பத் ,தம்பு ,பொள்ளாச்சி நகர தலைவர் சரவணன், பஷீர் பாய் ரத்தினபுரி,கே. ஆர். செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு சமக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உபைது ரஹ்மான் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.