திருவண்ணாமலை அடுத்த கருமாரப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 2022-ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் மங்கலம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, கருவூட்டல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை, ஆண்மை நீக்கம் செய்தல், திட்ட விளக்க அரங்கம், சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்குதல், பெண் கன்று பேரணி உள்ளிட்டவைகள் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் கருமாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கால்நடைகளை அழைத்து வந்து பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டனர். மேலும் சிறந்த கண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Leave a Reply