என்னை மூன்றாம் கலைஞர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான ...

தமிழகத்தின் கொரோனா அதிகரித்த 6 மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நகரங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. ...

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு என்றால் கிராம மக்கள் அனைவரும் பயமின்றி ஏதோ செல்லப்பிராணி போல் கொண்டாடுகின்றனர். அதுவும் ஏதோ தண்ணீர் பாம்பு என நினைத்துவிடாதீர்கள். அவை அனைத்துமே நாகப்பாம்புகள். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது சேத்பல் என்ற கிராமம். இது மோஹோல் தாலுகாவுக்கு ...

கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தற்போது தமிழ்நாடு,கேரளா, டெல்லி, கர்நாடகம், , அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 43 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 5 முதல் 10 ...

பீகார் மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என ஒரே நாளில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்கும் தலா ...

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்கொலையில் உயிரிழந்திருப்பார்கள் என யூகிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகின்றனர். இதில் போபத் ...

கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபது ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி ...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், மாவட்ட துணை சுகாதார பணிகள் இணை இயக்குநர் பரணிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ...

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (17.6.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்கள் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் ...

தவறான இடங்களில் கார், டூ வீலர் பார்க்கிங் செய்பவர்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பார்க்கிங் தொடர்பான புதிய சட்டம் வர உள்ளதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ...