பீகாரில் கனமழை: ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு..!!

பீகார் மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என ஒரே நாளில் உயிரிழந்த 17 பேர் குடும்பத்திற்கும் தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.