இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கிகளுக்குத் தடை-மாநில அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபது ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி அஷோக் கினாகி முதலானோர் அடங்கிய அமர்வு அரசு அதிகாரிகள் ஒலிபெருக்கிகள், பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் ஒலிச் சாதனங்கள், இசைப் பொருள்கள் முதலானவற்றை இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அதுகுறித்து மூன்று வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் இதுகுறித்து, `அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கைகளை எடுத்து அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள், பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் ஒலிச் சாதனங்கள், இசைப் பொருள்கள் முதலானவற்றைp பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.