உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்த நபர்: கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்…

உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்த நபர்: கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்…

 

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் மதுக்கரை பகுதியில் உயர் ரக போதை பொருளான METHAMPHETAMINE-ஐ விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடமான மச்சகவுண்டன் பாளையம் அருகே விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர் ரக போதை பொருளான METHAMPHETAMINE-ஐ வைத்து இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராசு மகன் திவாகர் (22) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5.750 கிராம் எடை உள்ள உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE)-ஐ பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.