ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஐபிகள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி  சினிமா நடிகை சமந்தா  பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை கோவில் ...

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் CKK மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சசிகலா ஆகியோர் உத்தரவின் படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ...

நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பிரபாகர், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ...

சத்தியமங்கலம்: தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  காவல்துறை சார்பில் தமிழ்நாடு தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை சத்தியமங்கலம் ஏஎஸ்பி ஐமன் ஜமால் தொடங்கி வைத்தார். பள்ளியிலிருந்து ...

தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தந்தி ஆபீஸ் முன்பிருந்து பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு சப்கலெக்டர் கௌரவ்குமார், தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தூத்துக்குடி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் ...

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். பல விமர்சனங்கள், எதிர்மறையான கருத்துக்கள் அனைத்தையும் கடந்து இன்று ஒரு மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். இவரது நடிப்பில் லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. சமீப காலமாக தன் படங்களின் மூலமாகவும் பாடல்களின் மூலமாகவும் அரசியலை ...

LGM இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து டிரைலரை வெளியிட்டு தோனி வெளியிட்டார். இதன் பின்ன பேசிய அவர் தெரிவித்ததாவது.. ‘ கடந்த 2005ஆம் ஆண்டு சென்னையில் தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினேன். அதேபோல் டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரான ...

கடலூர்: திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது. கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ...

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில்  ஹரித்திரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகரை உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் பிரதிஷ்டை  செய்து கோவில் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து ...