வாகன ஓட்டிகளே உஷார்!! தவறான இடங்களில் கார், பைக் பார்க்கிங் செய்பவர்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால்.. ரூ.500 பரிசு… விரைவில் வரப்போகுது புதிய சட்டம்.!!

தவறான இடங்களில் கார், டூ வீலர் பார்க்கிங் செய்பவர்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பார்க்கிங் தொடர்பான புதிய சட்டம் வர உள்ளதாகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, தவறான மற்ற இடங்களில், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக பார்க்கிங் செய்தால், அதுகுறித்த தகவல்களை போட்டு எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக தருவதற்கு மத்திய அரசு திட்டம் கொண்டு வராது உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இனி நோ பார்க்கிங் பகுதியில் பார்க்கிங் செய்யும் வாகனங்களை போட்டோ எடுப்பதற்கு என்று பலர் கிளம்பிவிடுவார்கள்.

எனவே, வாகன ஓட்டிகளே… போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல், நோ பார்க்கிங் பகுதியில் பார்க்கிங் செய்யாமல் பார்த்து கொள்வது உங்களது கடமை.