இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை 120 கோடி டாலருக்கு கவுதம் அதானியின் அதானி குழுமம், இஸ்ரேலின் காடாட் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்த விலைக்கு வாங்கியுள்ளன. இஸ்ரேல் செகல்ஸ் மதிப்பின்படி410 கோடிக்கு செகல்ஸுக்கு துறைமுகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலின் காடெட் நிறுவனமும், அதானி குழுமமும் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் இறக்குமதிச் செலவு ...
கோவை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஸ்ஸாம் மாநிலத்தில் பல இடங்களில் மழையால் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டு வருவதைத் தொடா்ந்து, கோவை – சில்சார், திருவனந்தபுரம் – சில்சார் இடையே இயக்கப்படும் ரயில்கள் ...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவானது. இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தாக்கம் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கந்துவட்டி புகார் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாராவது கந்துவட்டி வசூலித்தால் அல்லது கந்துவட்டி கொடுக்க கோரி மிரட்டினால் ,கந்துவட்டிக்காக நிலத்தை அடமான வைத்தல் அல்லது விற்பனை செய்த பின் வட்டி வசூலித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். ...
கோவை மாநகர காவல் துறையில் ஒரே நாளில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அதன் விவரம் வருமாறு:- சரவணம்பட்டி சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.பீளமேடு சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கணேஷ்குமாரும், சாய்பாபா காலனி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் மாற்றப்பட்டு ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, உயிலட்டி, கேர்க்கம்பை, காக்கா சோலை, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் மேரக்காய் விவசாயம் நடந்து வருகிறது. இங்கு பயிரிடும் மேரக்காய்கள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர வியாபாரிகளும் நேரடியாக வந்து கொள்முதல் செய்தும் செல்கின்றனர். தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ...
வரும் திங்கட்கிழமை முதல் அரிசி முதல் பால் வரை பல உணவு பொருட்களின் விலை உயர போகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் ஒரு சில உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது தான். ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கும் இந்த ஜிஎஸ்டி ...
சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது அளிக்கப்படும் என்று அறிவித்து 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக ...
பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில்,பதிவுத் துறையில் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ.4,988.18 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக,இதற்கு ...
கோவை:காற்றாலையில் இருந்து ஒரே நாளில், 12 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. கடந்த ஆறு மாதங்களில், 6,000 கோடி யூனிட் மின் உற்பத்தியாகியுள்ளது.அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறியதாவது:தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி, ஏப்., 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ...












