ஒரே நாளில் காற்றாலை மூலம் 12 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி..!!

கோவை:காற்றாலையில் இருந்து ஒரே நாளில், 12 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. கடந்த ஆறு மாதங்களில், 6,000 கோடி யூனிட் மின் உற்பத்தியாகியுள்ளது.அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறியதாவது:தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி, ஏப்., 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் ஒவ்வொரு நாளும், 10 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இதன் அதிகபட்சமாக, ஜூலை 9ல் 12 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது.இந்த மின்சாரத்தை முறையாக மின்சார வாரியம் பெற்று பயன்பாட்டுக்கு கொடுத்து வருவது பாராட்டுக்குரியது. காற்றாலைகளில் இருந்து தங்குதடையின்றி மின்சாரம் கிடைப்பதால், தமிழகத்தின் தேவையில், 35 சதவீதம் நிறைவு பெற்று வருகிறது.கடந்த ஆறு மாதங்களில், 6,000 கோடி யூனிட் மின் உற்பத்தியாகியுள்ளது. மரபு சாரா எரிசக்தியால், நாட்டின் எரிபொருள் தேவையை கணிசமாக எதிர்கொள்ள முடியும். அந்நிய செலாவணியையும் மிச்சப்படுத்த இயலும்.இதுபோன்றே சூரிய ஒளி மின்சார உற்பத்தியும், தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் கைகொடுக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.