சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது அளிக்கப்படும் என்று அறிவித்து 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 2022ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்குதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை நடைபெற்ற கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சட்டமன்ற பேரவையில், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன், பாராட்டத்தக்க வகையில், சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து, சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த தலைசிறந்த விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விவசாயம், கால்நடை, கல்வி, குடிநீர் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் முதலமைச்சரால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply