சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் வகையில், காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர், `ஆர்டர்லி’ என்ற முறையில் உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ...

கோவை உக்கடத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி நாளை( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால் , டி.கே. மார்க்கெட் ,ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ,உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, கலெக்டர் அலுவலகம் ...

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க உள்ளதாக ரயில்வே ...

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் உறவினர் தொடர்பான 127 இடங்களில் வருமானவ வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் தொடர்ச்சியாக சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி வருகின்றனர். பினாமி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை வருமான ...

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியில், மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய், சிலிண்டருக்கு 100 மானியம் உள்ளிட்ட பெண்களைக் கவரும் அறிவிப்புகளை தி.மு.க வெளியிட்டுள்ளது. அதில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மற்றும் பெண்களுக்கு ...

கோவை மாவட்டத்தில் கடந்த 28 ந் தேதி காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவு ஆனநிலையிலும், உடைந்த, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பால் டப்புகளிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லேஅவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் ...

கோவை: மக்கள் கூடும் இடங்களில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம், ‘மாஸ்க்’ அணியாதவர்களிடம் இருந்து இதுவரை, 2.30 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது; ‘கன்ட்ரோல் ரூம்’ மீண்டும் திறந்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.தற்போது, ‘மாஸ்க்’ கட்டாயமாக்கப்பட்டும் ...

ஜூலை மாதம் நாளை முதல் தொடங்க உள்ளது, உங்கள் பண விவகாரங்களைப் பாதிக்கும் வகையில் பல மாற்றங்கள் இருக்கும். அதாவது இந்த மாதம் நிதி விவகாரங்கள் தொடர்பான விதி மாற்றங்கள் இருக்கும். கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம், வருமான வரி விதி மாற்றம், உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. அதன் விவரங்களை ...

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது, சாதாரண, நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வங்கி ...

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூலையில் ...