கோவை மாநகர காவல் துறையில் ஒரே நாளில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அதன் விவரம் வருமாறு:- சரவணம்பட்டி சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.பீளமேடு சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கணேஷ்குமாரும், சாய்பாபா காலனி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சி .எஸ். தமிழரசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ரேஸ் கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பி எஸ் சுஜாதா மாற்றப்பட்டு உக்கடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கே கிருஷ்ணலீலா ரேஸ்கோர்ஸ் குற்றபிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மேற்கு பகுதி அனைத்து மகளீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா தேவி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பி தெய்வமணியும் .சைபர் கிரைம் மண்டல அலுவலக இன்ஸ்பெக்டராக சுந்தரேசனும் குனியமுத்தூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பிறப்பித்தார்.