இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை 120 கோடி டாலருக்கு கவுதம் அதானியின் அதானி குழுமம், இஸ்ரேலின் காடாட் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்த விலைக்கு வாங்கியுள்ளன.
இஸ்ரேல் செகல்ஸ் மதிப்பின்படி410 கோடிக்கு செகல்ஸுக்கு துறைமுகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலின் காடெட் நிறுவனமும், அதானி குழுமமும் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் இறக்குமதிச் செலவு குறையும், துறைமுகத்தில் நீண்டகாலம் கப்பல்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என இஸ்ரேல் நம்புகிறது.
இஸ்ரேல் நிதிஅமைச்சர் அவிக்டார் லிபர்மான் கூறுகையில் ” ஹைபா துறைமுகம் தனியார்மயமாக்கப்பட்டிருப்பதால், இனிமேல் போட்டி அதிகரிக்கும், வாழ்தாராச் செலவு, இறக்குமதிச் செலவுகுறையும்” எனத் தெரிவித்தார்.
ஹைபா துறைமுகத்தின் 70 சதவீதப் பங்குகள் அதானியிடமும், 30 சதவீதம் காடெட் நிறுவனத்திடமும் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் துறைமுக வர்த்தகத்தில் மிகப்பெரிய நிறுவனமான அதானி குழுமம், தன்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கடந்த மாதம் நடந்த நிர்வாகக் கூட்டத்தில் கரன் அதானி தெரிவித்தார்.
இதற்கு முன் ஹைபா துறைமுகத்தை ஷாங்காய் சர்வதேச துறைமுக குழுமம் நடத்தி வந்தது, ஆனால், இனிமேல் அதானி, காடெட் நிறுவனம் நடத்த இருக்கிறது.
துறைமுகத்தை கைப்பற்றி இருக்கும் புதிய உரிமையாளர்களால் இனிவரும் நாட்களில் போட்டி அதிகரிக்கும், 98 சதவீத இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இஸ்ரேல் கடல்பரப்பு வழியாகவே நடக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கடல்சார் வணிகத்தை மேம்படுத்தவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டு வருகிறது.
Leave a Reply