கோவை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அஸ்ஸாம் மாநிலத்தில் பல இடங்களில் மழையால் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டு வருவதைத் தொடா்ந்து, கோவை – சில்சார், திருவனந்தபுரம் – சில்சார் இடையே இயக்கப்படும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, கோவையில் இருந்து ஜூலை 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.45 மணிக்கு சில்சார்புறப்படும் வாராந்திர ரயில் (எண்:12515) குவாஹாட்டி – சில்சார இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில், கோவை – குவாஹாட்டி இடையே மட்டும் இயக்கப்படும். சில்சாரில் இருந்து ஜூலை 19ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8.10 மணிக்கு கோவைக்குப் புறப்படும் வாராந்திர ரயில் (எண்: 12516) சில்சார – குவாஹாட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் குவாஹாட்டி – கோவை இடையே மட்டும் இயக்கப்படும்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை 19ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.55 மணிக்கு சில்சார புறப்படும் வாராந்திர ரயில் (எண்:12507), குவாஹாட்டி – சில்சார் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, திருவனந்தபுரத்தில் இருந்து குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல, சில்சாரில் இருந்து ஜூலை 21 (வியாழக்கிழமை) இரவு 8.10 மணிக்கு திருவனந்தபுரத்துக்குப் புறப்படும் வாராந்திர ரயில் (எண்: 12508) சில்சார் – குவாஹாட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, குவாஹாட்டியில் இருந்து திருவனந்தபுரம் இடையே மட்டுமே இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply