கோவை: மேட்டுப்பாளையம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு அறிவொளி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ...
கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மசூதி வீதியை சேர்ந்தவர் சல்மான் கான்(வயது 23). இவர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவையில் தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது .இந்த நிறுவனத்தில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இந்த விளம்பரத்தை பார்த்து ...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், உதவி சப்- ...
திருடி திருடி நூறாவது முறையாக சிறைக்கு சென்ற நபர் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சபிர் அஹமது நேற்று பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது பிரகாசம் அருகே இவரது செல்போனை ஒரு நபர் திருடிவிட்டு பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த சபிர் உடனிருந்தவர்கள் உதவியுடன் தப்பிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து கடைவீதி ...
கோவை பெரியநாயக்கன்பாளைம் அருகே உள்ள தொப்பம்பட்டி , டேனியல் நகரில் வசிப்பவர்.சுதாகர் கிறிஸ்தவ மத போதகர். இவர் கடந்த 9-ந் தேதி ராக்கி பாளையம் , விநாயகர் நகரில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு ஜெபம் செய்ய காரில் சென்றார். பின்னர் ஜெபத்தை முடித்துவிட்டு வெளியே வந்த போது காருடன் டிரைவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவரது ...
தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். கடந்த மாதம் 17ஆம் தேதி இவரது வீட்டில் சிறுத்தையின் தோல் மொட்டை மாடியில் காய வைக்கபட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ...
சென்னை:மீன் பிடி படகில் கடத்த முயன்ற 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வஜ்ரா ரோந்துக் கப்பல் மன்னார்வளைகுடா கடலில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த போது ...
ஐதராபாத்தில் நர்சிங் கோர்ஸ் படித்து வருபவர் சுனந்தா ராவ். இவரின் சொந்த ஊர் குண்டூர். இவர் தன் கடனை அடைப்பதற்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் ஆன்லைனில் அடிக்கடி தேடுதலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஆன்லைனில் பிரவீன் ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பிரவீன் சுனந்தாவின் சிறுநீரகத்தை ரூ.3 கோடிக்கு ...
கோவை டாட்டாபாத், ராஜேந்திர பிரசாத் ரோட்டை சேர்ந்தவர். சின்னராஜ் .இவர் இறந்துவிட்டார் .இவரது மனைவி சித்ரா (வயது 68) இவர் நேற்று காந்திபுரத்தில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார் .பின்னர் அங்கிருந்து பவர் ஹவுஸ் வருவதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார் .டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் இறங்கும்போது அவர் அணிந்திருந்த 6 ...
கோவை : கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மகேஷ் ( வயது 34) இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றார்.அப்போது அந்த செல்போன் கடையின் உரிமையாளர் விஷ்ணு என்பவர் முகேசை ...