கோவை தனியார் நிறுவனத்தில் ரூ 14 லட்சம் மதிப்புள்ள 1440 கிலோ காப்பர் வயர் திருட்டு..!

கோவை பீளமேடு, மீனா ஸ்டேட் பகுதியில் துர்கா டிரான்ஸ்பார்மர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த 28ஆம் தேதி இரவு யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 1440 கிலோ காப்பர் வயரை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ௹14 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் வரதராஜன்,பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.