கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மேகராஜ் (வயது 57 )ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி தொழிலும் செய்து வந்தாராம்.இதுகுறித்து பொள்ளாச்சி டவுன் கிழக்கு பகுதி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது .போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் கடந்த 2018-2019-ம் ஆண்டு அரசு இல்லம் என்ற முகவரியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தை சேர்ந்த வி.வெங்கடேஷ் என்பவர் நடத்தி வந்தார். ‘ தங்கள் நிறுவனத்தில் பொதுமக்கள் காரினை கொடுத்தால் தாங்கள் நிறுவன மூலம் மாதம் ரூ.1000 கொடுப்பதாகவும், ...
இன்னும் மூன்று நாட்களில் ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என வடக்கு மண்ட ஐ.ஜி. கண்ணன் பேட்டி அளித்துள்ளார். கொள்ளை சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பிட்ட வகையான ஏடிஎம் இயந்திரங்களில் மட்டும் தான் கொள்ளையர்கள் கைவரிசை ...
துருக்கி நாட்டில் நிலநடுக்கத்தால் பலர் இறந்துள்ள நிலையில் அதற்கு நடுவேயும் கூட திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் பல இடிந்து விழுந்ததுடன் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பதற்காக ...
கோவை: நெல்லையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 50). இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் நெல்லை செல்வதற்காக தனது நண்பர் கோவை சேர்ந்த விஜய் (45) என்பவருடன் ரெயில் நிலையம் வந்தார். நெல்லை செல்வதற்காக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறினார். அப்போது தான் கொண்டு வந்த லேப் -டாப் பேக்கை ...
கோவை மாநகரப் பகுதிகளில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் பொது இடங்களில் விளம்பரம் செய்யும் செயல்பாடுகள் குறையவில்லை. இதை தவிர்க்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு கட்டிட ...
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 19). இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவர் தனது நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வருகிறார். சம்பவத்தன்று கார்த்திகேயனின் மற்றொரு நண்பர் ஆண்டோ என்பவர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி வெளியே சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து ...
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி சேர்ந்தவர் ராஜா இவரது மகன் சக்தி என்ற சத்திய பாண்டி ( வயது 31) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் .இவரது சொந்த ஊர் மதுரை ஆராப்பாளையம் பக்கம் உள்ள பாக்கியநாதபுரம் அசோக் நகர் . நேற்று இரவு இவர் பீளமேடு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் ...
கோவை மாவட்டம் ,வடக்கி பாளையம் பக்கம் உள்ள கோவிந்தனுர் .பாறைமேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக வடக்கு படை போலீஸ் தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குள்ளி செட்டிபாளையம் அஸ்வின் ( வயது 18) டி. ...
கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் விவேக் ஆகியோர் பெரிய கடை வீதி லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.அவர்கள் வைத்திருந்த பையில் குண்டுகள் நிரப்பபட்ட துப்பாக்கி (பிஸ்டல்), ஒரு அரிவாள் ...












