கோவையிலிருந்து கேரளாவுக்கு ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையங்களில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையின் அருகே 2 மூட்டைகளில் 30 கிலோ ரேஷன் அரிசி அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளை ரயிலில் கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக யாரோ கொண்டு வந்துள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் அரிசி மூட்டைகளை போட்டு விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது .இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .அரிசி மூட்டைகளை கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply