கோவை புதூரில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் .இவரது மகன் பார்த்திபன் (வயது 30)அங்குள்ள விநாயகர் கோவில் முதல் வீதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இவர் நேற்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் அங்கு வந்தனர்.தங்களை குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்கும் தனிபடை போலீசார் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர்.நீ மறைமுகமாக குட்கா விற்பனை செய்வதாக காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. உன் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ,ரூ 50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் .இல்லாவிடில் உன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டினார்களாம். இதனால் பயந்து போன பார்த்திபன் அவர்களிடம் ரூ 50 ஆயிரம் கொடுத்தார் .அவர்கள் சென்ற பிறகு தான் 3 பேரும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.இதுகுறித்து பார்த்திபன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்
Leave a Reply