வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் புகுந்து நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்- முன்னாள் ஊழியர் கைது..!

கோவை ரங்கே கவுடர் வீதியில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தினகரன்.இவர் சங்க கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் நேற்று மதியம் தலைமை அலுவலகத்தில் வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.அப்போது தினகரன் அத்துமீறி அறைக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசி, நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.இது குறித்து சங்க பொருளாளர் வெனீஸ் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு தினகரனை இன்று கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்’