கோவையில் பயங்கரம்… நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை- கூலிப்படை கைவரிசை..

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி சேர்ந்தவர் ராஜா இவரது மகன் சக்தி என்ற சத்திய பாண்டி ( வயது 31) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் .இவரது சொந்த ஊர் மதுரை ஆராப்பாளையம் பக்கம் உள்ள பாக்கியநாதபுரம் அசோக் நகர் . நேற்று இரவு இவர் பீளமேடு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 5பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அனைவரும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர் . அந்த கும்பல் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு அரிவாளால் சத்தியபாண்டியை சரமாரியாக வெட்டினர்கள் இதனால் அச்சம் அடைந்த சத்திய பாண்டி அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை ஓட ஓட துரத்தி சென்றது. இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஒடினர். அந்த கும்பலிடமிருந்து உயிர் தப்பிக்க சத்தியபாண்டி சாலையோரம் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை துரத்தி சென்று அந்த வீட்டிற்குள் புகுந்தது அந்த வீட்டில் குழந்தைகள் சிலர் இருந்துள்ளனர். குழந்தைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அந்த கும்பல். சத்தியபாண்டியை துப்பாக்கி சுட்டும், கொடூரமாக வெட்டினர். 20க்கு மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது . 2 இடங்களில் துப்பாக்கியால் சுட்டது. இதனால் சக்தி பாண்டி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.இது பற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .துணை போலிஸ் கமிஷனர் சந்தீஸ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜுஎன்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை தொடர்பாக சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் .இவர் மீது மதுரையில் உள்ள போலீஸ் நிலையத்தில் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன .ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.சத்திய பாண்டி மனைவி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இவர்கள் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கோவையில் ஒரு இடத்தை காலி செய்வது தொடர்பாக கூலிப்படையை வைத்து இந்த கொலை நடந்ததாக சந்தேக படுகிறது.