கோவை ரேஸ் கோர்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சிதம்பரம் (வயது 29) இவர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தாராம்..இதை போலீஸ்காரர் சிதம்பரம் அவரை கண்டித்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி போலீஸ்காரர் சிதம்பரத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் போலீஸ்காரருக்கு காயம் ஏற்பட்டது .அந்த ஆசாமியை போலீஸ்கார சிதம்பரம் கையும் களவுமாக பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார் .போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கணபதி, பதிக்கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் தனீஷ் ராஜ் (வயது 21)என்பது தெரிய வந்தது. இவர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாது தடுத்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply