மில் ஊழியர் குடியிருப்பில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவுடன் வடமாநில வாலிபர் கைது..!

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் டோபா பிரதன் ( வயது 22) இவர் சூலூர் அருகே கலங்கலில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவர் சக தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மில் ஊழியர் குடியிருப்பில் அவர் தங்கி இருந்த அறையில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டோபா பிரதன் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.