கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்படும் ஒரு மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி (வயது 35) இவர் நேற்று நீதிமன்றத்தில் இருந்து அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை மஞ்சுஸ்வரி மற்றும் அவரது பெற்றோர்கள் சேர்ந்து மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி கொலை ...

கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 36). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன் . சில நாட்களுக்கு முன்பு எனது முகநூலில் இடம், வீடு விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் பார்த்தேன். ...

கோவை சின்னியம்பாளையம் இந்திர நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே காலை வேலைக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென பெருமாளை தடுத்து நிறுத்தினர். அவர்கள் பெருமாளிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ...

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையம், அனீஸ் கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 42) இவர் கட்டிட காண்ட்ராக்ட் மற்றும் சிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார்.கடந்த 25 ஆம் தேதி மணிகண்டன் மனைவி மகேஸ்வரி கோவைபுதூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது ...

பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவின்றி ஏறியதால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். வெறும் unresverved டிக்கெட்டை வைத்துக்கொண்டு அனைத்து பெட்டிகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அவதிக்குள்ளான பயணிகள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 62))அந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி (வயது 60)) இவர்களுக்கு சுரேஷ்குமார் ( வயது 34) என்ற மகனும் நித்திய பிரியா (வயது 33) என்ற மகளும் உள்ளனர். ...

கோவை சிங்காநல்லூர்,நீலி கோணாம் பாளையத்தில் உள்ள நேதாஜிபுரம், விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 37 ) இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றிருந்தார் . நேற்று இவரது வீட்டின் பூட்டு ...

கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் போலீசாருக்கு நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 43 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4.5 ...

கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் ரோட்டில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று பி.என்.புதூர் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ரகுராமன் (வயது 20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆகிய 2 பேரும் மது குடிக்க வந்தனர். அப்போது குடிபோதையில் இருவரும் பாரில் மது குடித்து கொண்டிருந்த சிலருடன் தகராறில் ...

கோவை : சூலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு இயங்கி வருகிறது. இந்தப் பிரிவின் மேம்படுத்தப்பட்ட வளாகத்தை கோவை மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்குள்ள மோப்ப நாய் பிரிவை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மோப்ப நாய்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து மோப்பநாய் பிரிவில் ...