கோவை கல்லூரி மாணவர்களிடையே கோஷ்டி மோதல் – ஒருவர் காயம் -2 பேர் கைது..!

கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திங்களூரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 20)இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி .ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் கல்லூரி பின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரும் சதீஷ்குமார் வயது 17 பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திலீப் (வயது 18)ஆகியோருக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், திலீப் மற்றும் சிலர் சேர்ந்து வீரப்பனை இரும்பு தடியால் தாக்கினார்களாம். இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார், திலீப் ஆகியோரை கைது செய்தனர் . பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.