கோவை லாட்ஜ் முன் நின்று கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது..!

கரூர் மாவட்டம் பாலக்காட்டுத்துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 18) இவர் மதுக்கரை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள மாச்சி கவுண்டன்பாளையத்தில் ஒரு லாட்ஜ் அருகே நின்று கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோடு சுற்றி வந்த மதுக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கைது செய்தார். இவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.